பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 181

“கோபமில்லை, வி.ஜி. குழந்தை வந்ததுன்னா வரட்டும், வராட்டி சரின்னு சொல்றது நியாய மில்லையே?”

“விவரணையாச் சொல்லட்டுமா? ஆசைப்பட்டா, பொறுப்பு ஏத்துக்கணும்; பொறுப்பு ஏத்துக்கப் பயந்து ஆசைப்படாம இருக்கேன் என்பது விதண்டா வாதம். பொறுப்பு இல்லாமலா, இரண்டு தங்கைகளுக்குக் கலியாணம் பண்ணினேன்? ஆசைப்பட்டா, வளைக்கத் தோணும்; வளைக்க முடியாத ஆசையாயிருந்தா, மனசு அல்லல்படும். மனுஷாளாலே முடியாத காரியமாய்ப் போய், கடவுள் - ப்ரேயர்னு வரும் கேட்டது கிடைக்க லேன்னா, இடிஞ்சு போகும்படி வரும் இடிஞ்சிபோனா, அமைதி இருக்காது. யாரையாவது குத்தம் சொல்லத் தோணும். அதுக்கும் ஆள் கிடைக்கலேன்னா, தன் தலை யிலே தானே அடிச்சுக்க ஆத்திரம் வரும் ரிலேஷன்ஷிப் கெட்டுப் போகும். யாருமே சரியான உறவு இல்லைன்னு கோபம் வரும். கோபம் மறுபடி மறுபடி உறவைக் கொடுக்கும். நல்ல உறவு வேணும்னா ஆசைப்படாம இருக்கிறது முக்கியம், சரியா?”

“நான் உன்னைக் கல்யாணம் பண் ணி ண் ட து குழந்தைக்கு ஆசைப்பட்டுன்னு சொன்னா?”

.

“அப்போ உறவு சரியாதா? அனுசரிச்சுப்போறது. அலுப்பாயிடாதா? எத்தனை நாளைக்குப் பணிஞ்சு இருக் கறது?... போறும்னு தோணாதா?’

“இது நியதி. ரோடு போட்டாச்சுன்னா, நடுவுல கோடு போட்டு, வலப்பக்கம், இடப்பக்கம்னு பிரிச்சுத் தான் இருக்கும். நான் வலப்பக்கம் போவேன்னு முரண்டு பிடிக்கலையே? இடப்பக்கம் தனியே நடந்தேன். இப்ப உங்களோடு நடக்கிறேன். ஸ்பீடா போன்னா. ஸ்பீடா

ஜெ-12