பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 77



இலக்கியத்தில் அஷ்டாவதனம் கெய்து, தெய்வப் புலவரின் தலையிலேயே கையை வைத்த அன்பரின் ‘எண்ணைமில்’ அழகாக இல்லையா? அச்சுப் பேயைக் கை காட்டினால், அது தவறு ! .

‘கல்யாணத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் நடந்தது!’

இலக்கணம் வதைப்படவில்லையா ?

‘அபிவாதையே சொல்லாத குறையாக சாஸ்திரிகள் சொன்னார்.”

என்ன அர்த்தமாம் ?

‘கிரோஸின் சிம்னியுடன்’ சமையல் அறை வாசற்படி யண்டை நின்றாள் !’

நல்ல தமிழிலே எழுதக் கூடாதோ ?

இம்மாதிரி இன்னும் எவ்வளவோ வரிகள் புரியானவாகவும், ஆழ்ந்து படிக்கும்போது, சிரிப்புத் தருவனவாகவும் இருக்கின்றன. ‘தமிழறிவு’ வளம் பெற்றிருந்தால், இப்படிப் பட்ட பிழைகள் ஏற்பட்டிருக்குமா?

மொழி நடையின் தூய்மைக்கென அமைந்திருக்கும் வேலிகளான இலக்கணம், மரபு ஆகியவற்றின் தேவைகளின் இன்றியமையாத் தன்மை குறித்து திரு. நா. பார்த்தசாரதி ஒரு முறை எழுதியிருந்தார் : ஒட்டைக் கிண்ணத்தில் எண்ணெய் தங்குமா ? ஒழுங்கும். மரபும், இலக்கணமும் இல்லாதமொழி நடையில் கருத்துக்கள் தங்குமா தங்கத்தான் முடியுமா ?

உண்மைதானே?