பக்கம்:ஜெயரங்கன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 179

என்றாள். கோவிந்தன் காசி செல்லம் லக்ஷ்மியின் புத்திரி பல்ல வென்றும் செல்லத்துடன் இன்னெரு பெண் இரட்டைக் குழந்தை இருந்ததாகவும் இதுவரையில் ஸ்திரப்படுத்திக் கொண் டேன். இனி நேரான முறையில் இவளைக் கேட்டால் சத்தியத்திற்கு மாருக இவள் பேசமாட்டாள்; இனி இவளை ஏமாற்றியே உண்மை யறிய வேண்டும்” எனத் தனக்குள் தீர்மானித் துக் கொண்டு முந்திய நாள் அவள் சந்தித்த சாமியாாைப் பற்றி வெகு உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்து திடீரென்று, . . .

கோவிந்தன்:-கும்பகோணம் சென்றிருந்த போது நீ எங்கு இறங்கியிருந்தாய்? *

தே. லக்ஷிமி -உப்புக்காாத் தெரு 28-ம் நெம்பரில்,

மீண்டும் சற்று நேரம் பொது விஷயங்களைப் பேசி விட்டு, கோவிந்தன்:-ே அங்கிருந்த போது அடிக்கடி போய் பேசிக் கொண்டிருந்தாயே! அவர்கள் பேரென்ன? -

தே. லக்ஷ்மி-சக்ரபாணி செட்டியார் வீட்டிற்குத்தான் அடிக் கடி போவது வழக்கம். -

கோவிந்தன்:-ஆம்; ஆம்; உண்மைதான். நீ போயிருந்த போது வெளி ஊரார் வந்திருந்தார்களே, அவர்கள் வீட்டுக்கும் அடிக்கடி போய் வங்காயென்று கேள்விப்பட்டேனே. அவர்கள் எந்த ஊர்க்காரர். -

தே. லக்ஷ்மி-எனக்குக் தெரியாது. அவர்கள் ஏதோ ஒரு, மாதிரி பாஷை பேசினர்கள். அவர்கள் ஊர் சொன்னர்கள் எனக்கு இப்போது ஞாபகமில்லை.

கோவிந்தன்-போகட்டும்; அதைப் பற்றி தமக்கென்ன. அவர் கள் தலையில் ஒரு மாதிரி சீப்பு சொருவி யிருந்தார்களல்லவா?

தே. லக்ஷிமி-ஆம்; அது தங்களுக்கு எப்படித் தெரியும்? கோவிந்தன்:-எனக்குக் கெரியாமலா கேட்கிறேன். அவர் கள் சிங்கள ஜாதியார். சாதாரணமாய்த் தமிழர்களைப் போல் தான் பெண்கள் உடை உடுத்துவார்கள், தமிழும் என்றாய்ப் பேசுவார்கள். அவர்களுக்குள் பேசும் போது மாத்திரம் சிங்கள பாஷையில் பேச வார்கள். அவர்கள் தானே இன்ைெரு பெண் குழந்தையை எடுக் துச் சென்றர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/184&oldid=633047" இலிருந்து மீள்விக்கப்பட்டது