இந்தியத் தொழிலாளர் சேரும் ; வேலையும் போகும் ; ரஸ்தாவில் கிடந்து உழல வேண்டியதுதான். இதற்குக் காரணம் காண அதிக சிரமப்பட வேண்டியதில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் முதலாளிகள் கொழி லாளர்கள் இரு கட்சியாருக்கும் உள்ள பலாபலன்தான். முதலாளிகள் ஒரு ராணுவத்தைப் போன்ற கட்டுப்பாடும் வலிமையும் பெற்றிருக்கிருர்கள். இலங்கை அரசாங்கமும் அவர்கள் கைக்குள் அடக்கம்- அதாவது அவர்கள் விரும்பியதைச் செய்வது. தேயிலை, ரப்பர், கொக்கோ உற்பத்தி, பக்குவப்படுத்தல், விநியோ கம் ஆகிய முறைகளில் மிக நுணுக்கமான ஆராய்ச்சிகள் செய்து அளவற்ற லாபம் அளிக்கும் முறைகளை அவர்கள் கையாளுகிருர்கள். உலகம் முழுவதிலும் இவ்வளவுதான் உற்பத்தி செய்யவேண்டும்; இவ்வளவுதான் செலவழிக்க வேண்டும் ; ஒவ்வொரு தோட்டமும் இதற்கு மேல் உற்பத்தியே செய்யக்கூடாது; பயிரிட வேண்டியதே இத்தனை ஏக்கர் நிலம்தான் ; பாக்கி இத்தனை ஏக்கர் காடாகவே இருக்கவேண்டும் ; அந்தக் காட்டை அழிக்கவும் கூடாது - என்றெல்லாம் அவர்கள் சட்ட திட்டங்கள் செய்துகொண்டு இருக்கிருர்கள் மற்ற உலக முதலாளிகளுடன் சேர்ந்து. ஒரு திருஷ்டாங்கம் பாருங்கள் : 1986-87 ல் உலகம் முழுவதும் தேயிலை குடிப்பவர்கள் உபயோகித்த தேயிலை 8,908 லட்சம் ராத்தல் ; 1937-38 ல் 8,599 லட்சம் ராத்தல் ; 309 லட்சம் ராத்தல் குறைந்து போய்விட்டது என்பது அவர்களுக்குத் தெரியும். இ வ் வ ள வு துல்லியமான கணக்குகளும், சக்தியும், இந்தியத் தொழிலாளர் 43
பக்கம்:ஜெயில்.pdf/48
Appearance