இந்தியத் தொழிலாளர் கூலிகள் சம்பள விபரம் : ஆண் பெண் குழந்தை சதம் சதம் சதம் மேற்பகுதி 49 39 29 மத்திப்பகுதி 43 35 25 கீழ்ப்பகுதி 41 33 24 மேலே கண்ட முறைப்படி எல்லாத் தோட்டங் களிலும் நமது தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக் கப்படுகிறது என்று ர்ேமானித்துவிட முடி யாது. இப்படிக் கொடுக்கவேண்டும் எ ன் ப து சட்டம். சட்டப்படி தொழிலாளருக்கு எட்டு மணி நேரம் வேலை தான் கொடுக்கப்பட வேண்டும். அந்த நேரத்திற்குள், அவர்கள் நியாயமாய்ச் செய்கிற வேலைதான் கணக்கு. கூடுதல் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனல், இந்த 8-மணி நேரம் வேலை எந்தத் தோட்டங்களில் அமுல் நடத்தப்படுகிறது என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாது. ஏனெனில், ஒரு தோட்டத்திலும் அப்படி நடப்பதாய்த் தெரியவில்லை. தேயிலை பறித்தல், முள்ளுக் குத்தல், கவாத்து வெட்டுதல், குழி வெட்டுதல் எல்லா வற்றிற்கும், செய்து முடிக்கும் அளவுக்குத் தக்கபடியே கூலி கொடுக்கப்படுகிறது. ஒருவனே ஒருத்தியோ குறிப் பிட்ட அளவு வேலை செய்தால்தான் ஒரு நாள் கூலி கொடுக்கப்படுகிறது. இதை டாஸ்க் என்று சொல்லு வார்கள். இந்த டாஸ்க் முறை இருக்கக் கூடாது என்பதற்காகவே சட்டம் நாள் கூலி விகிதத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. இதல்ை பெரும்பாலான தொழி 51
பக்கம்:ஜெயில்.pdf/56
Appearance