பக்கம்:ஜெயில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் லாளருக்கு ஒரு நாள் என்பது 48-மணி நேரமாகவோ, 96 - மணி நேரமாகவோ ஆகிவிடுகிறது. எத்தனை மணி நேரம் வேலை செய்தால் ஒரு நாள் சம்பளம் கிடைக்குமோ அத்தனை மணியும் சேர்ந்துதானே ஒரு நாள் ஆகும்! ஆண்களுக்கு, 100 குழி வெட்டினல் 40, 43 சதம் சம்பளம் என்று தோட்டக்காரர்களாகவே நிர்ணயித்து விடுகிருர்கள். தேயிலைச் செடிகளைக் கவாத்து செய்வதற்கு, 225 முதல் 250 செடிகள் வரை கவாத்து செய்தால் தான் ஒரு நாள் சம்பளம். இது கஷ்டமான வேலை யாகையால் சில சமயங்களில் 6 சதம் கூடுதலாகவும் கொடுக்கப்படும். பெண்கள் 20 ராத்தல் தேயிலைக் கொழு க் து பறித்தால்தான் ஒரு நாள் சம்பளம். கூடுதலாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு ராத்தலுக்கும் 2 அல்லது 1 சதம் கொடுக்கப்படும். கூடுதல் தேயிலை எடுப்பது என்பது அபரிமிதமான கொழுந்துகள் தளிர்த் திருக்கும் பொழுதுதான் சாத்தியம். ஆளுே, பெண்ணுே, குழந்தையோ, குறித்த அளவுக்குக் குறைவாக வேலை செய்திருந்தால், வேலைக்குத் தக்கபடி அரைப் பெயர், கால் பெயர் ' என்று போடப்படும். இந்தப் பெயர் போடும் விங் ைத ய ர ல் த ர ன் கோட்டக்காரர்கள் சட்டத்தை உடைத்தெறிய முடிகிறது. ஒரு நாளைக்கு உரிய சம்பளத்தை வாங்குவதற்கு எத்தனே நாள் வேலை செய்தாலும் கணக்கில் ஒரு நாள் சம்பளமாகவே குறிக்கப்படும்) ஒரு தொழிலாளி இன்று பாதி வேலையை மட்டும் செய்திருந்தால், அவன் என்று முழுவேலையையும் முடிக்கிருனே, அன்றுதான் ஒரு நாள் சம்பளம் கணக்கில் எழுதப்படும். எனவே, குறைந்த பட்சச் சம்பள விகிதச் சட்டத்தை மிகவும் கண்டிப்பாக அமுல் செய்து, 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/57&oldid=855514" இலிருந்து மீள்விக்கப்பட்டது