5. தேசிய மறுமலர்ச்சி 1600-ம் u டிசம்பர் மீ 31வ, இங்கிலாந்தில் ஆட்சி புரிந்துவந்த எலிஸபெத் மகாராணி, கிழக்கிந்தியத் திவுகளில் வர்த்தகம் செய்வதற்காக லண்டனில் அமைக் கப்பட்ட கம்பெனியை அங்கீகரித்து அநுமதிப் பத்திரம் ஒன்றும் கொடுத்தார். அதிலிருந்து ஆங்கிலேயருக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு ஆரம்பம ாயிற்று. & 1072-ல் இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்த ஆங்கிலக் கம்பெனிகள் யாவும் ஒன்று சேர்க்கப்புட்டு ஐக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி ஸ்தாபிக்கப்பட்டது. அதிலிருந்து இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று; இந்தியாவின் கதி ஒரு புதிய கிசையை நோக்கித் திரும்பியது. வியாபாரம் செய்து வந்த வர்த்தகர்கள் நாடு பிடிக்க ஆரம்பித்தனர். அதுவரை உலகில் நாடு பிடிப்பதற்குப் பெரிய யுத்தங்கள் செய்தது உண்டு. ஆனல், இந்தியா யுத்தத்தில் ஜயிக்கப்படவில்லை; வியாபாரத்தில் கெலிக்கப்பட்டது. குண்டுகளும், வாளும், வேலும் எ றிய ப் படா ம ல், மிளகும், கிராம்பும், கண்ணுடியும், பீங்கானும் விற்றுவந்த வர்த்தகக் கூட்டத் தாரால் இந்தியா பெறப்பட்டது சரித்திரத்தின் மகத்தான ஆச்சரியங்களுள் ஒன்று. கிளைவ் என்னும் சாமர்த்தியம் உள்ள வாலிபர் 1758- ல் கம்பெனியின் கவர்னராக வந்தார். அவரே ஆங்கில ராஜ்யத்திற்கு இந்தியாவில் 74
பக்கம்:ஜெயில்.pdf/79
Appearance