உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசீய மறுமலர்ச்சி ருக்குக் குறிப்பிட்ட தொகையைக் குத்தகையாகச் செலுத்திவிட வேண்டும் என்று ஏற்பாடு செய்யப் பட்டது. இதல்ை அரசாங்கத்தின் கெளரவம் மிகவும் குறைந்து போயிற்று. மற்றும் கம்பெனி புரோக்கர் களாக நியமிக்கப்பட்ட இந்தியர்கள் ஒழுக்கம் இன்றிப் பண ஆசையுடன் எதை வேண்டுமாயினும் செய்து வந்ததால் ஜனங்களின் வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வநதது. போதாக் குறைக்கு நாட்டின் கைத்தொழில்களை அழிப்பதற்கு க ம் .ெ பனி யார் பல எற்பாடுகளைச் செய்தனர். அழகிய மஸ்லின்களையும் சல்லாக்களையும் நெய்து வந்த நெசவாளர்கள் கம்பெனியின் தொழிற் சாலைகளில் வந்து வேலை செய்யலாமே ஒழியத் தத்தம் விடுகளில் வேலை செய்யக்கூடாது என்று விதிக்கப் பட்டது. உத்தரவை மீறியவர்களின் கைப் பெருவிதல்கள் துண்டிக்கப்பட்டனவாம். 18-ம் நூற்ருண்டின் பிற்பகுதி வரை இந்தியப் பொருள்கள் இங்கிலாந்தில் மலிவாக விற்கப்பட்டு வந்தன. ஆனால், அடுத்த நூற்ருண்டில் இந்தியக் கைத்தொழில்கள் நசுக்கப்பட்டு, சீமையில் இந்தியச் சாமான்களுக்குப் பளுவான இறக்குமதித் தீர்வைகள் விதிக்கப்பட்டு, உள்நாட்டு மூலப் பொருள்கள் கப்பலேறவும், சீமையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதியாகவும் ஏற்பாடு செய்யப் பட்டது. இதல்ை வேலையில்லாத் திண்டாட்டமும் வருமானக் குறைவும் ஏற்பட்டன. அன்று தொடங்கிய வேலையின்மையும், பசிப் பிணியும், பஞ்சமும் இன்று தேச முழுதும் பரவி கிரந்தரமாய் நிலைத்து நிற்கின்றன. 79 ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/84&oldid=855575" இலிருந்து மீள்விக்கப்பட்டது