கட்டுரைகள் குறைகள் பலவாகப் பெருகி யிருந்தபோதிலும் ஜனங்களிடையே எதிர்ப்புணர்ச்சி தடிப்பேறவில்லை. தேசம் அனைத்தும் ஒரே உயிர் என்ற எண்ணம் த்ோன்ற வில்லை. அகில பாரதமும் ஒரே மூச்சில் விடுதலை பெற்று இலங்கவேண்டும் என்ற ஆதர்சம் பிரகாசிக்க வில்லை. இதற்கு முன்னுல் ஏற்பட்ட எழுச்சிகளும் சரியான வழி காட்டிகளாய் விளங்கவில்லை. ரஜபுத்திரர்களின் எழுச்சி ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டிருந்தது. மராட்டியர் செய்த பெருமுயற்சி தங்களுடைய விடுதலையையும் ஒரு மராட்டிய ராஜ்ய ஸ்தாபனத்தையுமே குறியாகக் கொண்டு இருந்தன. அக்காலத்து வங்காளியர், மராட்டியரை விடுதலை விரராகக் க்ருதாமல், கொள்ளைக்காரராகவே எண்ணியிருந்தார்கள். வங்கத் தாய்மார்கள், மராட்டியர் வந்து விட்டனர்! தாங்குங்கள்!' என்று கூறிப் பயமுறுத்திக் குழந்தைகளைத் தாலாட்டுவது வழக்கமாக இருந்தது. மராட்டியர் பொதுஜன அபிமானத்தையும் ஆதரவையும் பெறவில்லை. சுருங்கச் சொன்னுல் அகில பாரத ஐக்கியமும், தேசீய உணர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆங்கிலேயர் தங்களுக்கு வேண்டிய குமஸ்தாக் களையும், அடிமைகளையும் தயாரித்துக்கொள்ள ஆங்கிலக் கல்வி முறை ஒன்றை ஏற்படுத்தினர். ஆங்கி ல க் கல்வியினுல் இந்தியாவுக்கு லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு. மேல்திசை நாகரிகத்தின் போக்கையும், சுதந்திர அரசியல் ஸ்தாபனங்களின் வளர்ச்சியையும், அறிவுப் பெருக்கையும் தெரிந்துகொள்ள அது அவசியம். ஆல்ை, அரசியலில் அடிமைப் படுத்தப்பட்ட இந்தியரின் உள்ளத் 80
பக்கம்:ஜெயில்.pdf/85
Appearance