பக்கம்:ஜெயில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் அவிழ்த்து ரஸ்தாவில் இருந்த மரங்களில் அவர்களைத் தூக்கில் இடும்படி உத்தரவுகள் போடப்பட்டன என்ருல், துவேஷ அனல் எவ்வளவு பற்றி யெரிந்தது என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். - I - அந்த யுத்தத்தில் சிப்பாய்களுக்கு ஏற்ற தலைவரில்லே. சீக்கியர்கள் ஆங்கிலேயருக்கு உதவியாய் நின்றனர். இதுவே தோல்விக்கு ஒரு மூல காரணமாயிற்று. மேலும், தேசிய உணர்ச்சியும் ஐக்கியமும் மிகவும் குறைவாக இருந்தன. எனவே, போர் தொடங்கியவர்கள் தோல்வி யடைந்தனர். 1857 போராட்டத்திற்குப் பின்னர், வட இந்தியா முழுதும், பயங்கரமான கஷ்டங்களுக்குப் பின் தோன்றும் அயர்வில் ஆழ்ந்துவிட்டது. அந்த நாம் ரு ண் டி ன் பிற்பகுதியில் மறுபடி வங்காளம் தலைதுாக்க ஆரம்பித்தது. இலக்கியத்திலும் மற்ற துறைகளிலும் அங்கே மறுமலர்ச்சி ஏற்பட்டது. சுரேந்திரநாத பானர்ஜி, விபினசந்திர பாலர், பங்கிம் சந்திரர் போன்ற பல மேதாவிகள் முன் வந்தனர். எங்கும் அவர்கள் விடுதலைப் பேரிகையைக் கொட்டி முழக்கினர்கள். பத்திரிகைகள், பிரசங்கங்கள், பஜனைகள் முதலிய பல உருவங்களில் தீ விர மா ன பிரசாரம் தொடங்கிற்று. பொதுவாகவே தேசத்தில் வெறும் பிரேம தர்மம் என்ற பெயரால் வீரம் பாழாக்கப் பட்டதாகக் கருதப் பட்டு, உணர்ச்சியும், தைரியமும் பெருகத்தக்க முறையில் தேசியப் பிரசாரம் செய்யப்பட்டது. கிறிஸ்து நாதரால் 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/89&oldid=855584" இலிருந்து மீள்விக்கப்பட்டது