பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

லேசாக ஜன்னலைத் திறந்து பார்ந்தான். இரண்டு. ஜீப்கார்கள் ஒளியைப் பாய்ச்சிக்கொண்டு வேகமாகப் பறந்தன. பின்னால் வந்த காரின் ஹெட்லைட்: முன்னால் சென்ற ஜீப்பிலுள்ளவர்களைக் காட்டியது. அதில்

சிவப்புத் தொப்பி அணிந்த நாலைந்து போலீஸ் காரர்களும், முன் எமீட்டில் ஓர் இன்ஸ்பெக்டரும் இருப்பது தெரிந்தது.

அந்தப் போலீஸ்வான் இந்த வேளையில் எங்கே செல்லுகிறது?’ என்று சங்கர் கணநேரம் தான் யோசித்திருப்பான்

அதற்குள் அவன் கேட்க நேர்ந்த மாலை நேரச் சம்பாஷணை நினைவுக்கு வரவுமே, சங்கர் திடுக் கிட்டுப் போனான். அவனையும் அறியாமல் ஏதோ ஒரு சக்தி அவனை அங்கிருந்து உந்தித் தள்ளுவது போலிருந்தது. --

ஏதோ ஆவேசம் வந்தவனைப்போல் சங்கர் வேகமாக புறப்பட்டான். தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்ததை எடுத்து டிராயருக்கும், வயிற்றுக்கும் இடையில் செருகிக்கொண்டான்.

உள்ளே எட்டிப்பார்த்தான்; வசந்தி நன்றாகத் தன்னை மறந்து துரங்கிக்கொண்டிருந்தாள். சமையற் காரக் கிழவி, அடுக்களை வாசற்படியில் தலையைச் சாய்த்துக் கொண்டு துரங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய துரக்கம் உண்மையோ பாசாங்கோ என்பதைச் சங்கரால் கண்டுகொள்ள முடியவில்லை.