பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மெதுவாக வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியே புறப்பட்ட சங்கர், கதவை மீண்டும் மெள்ளச் சாத்திவிட்டுத் தெருவில் இறங்கி வேகமாக நடந்தான். =

சந்தானத்தின் வீட்டை நெருங்கும்போது சங்கர் எண்ணியது சரியாக இருந்தது! அந்தப் பெரிய வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. காம்பவுண்ட் ஒரமாக ஒரு நிழல் மறைவில் நின்று சங்கர் கவனித்தான்.

போலீஸ் ஜவான்கள் சற்று ஒரமாக நின்று கொண்டிருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர், சந்தானத்திடம் ஏதோ ஒரு புத்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக் கொண் டார். பிறகு தரையில்கிடந்த பெட்டியிலிருந்து கற்றை கற்றையான நோட்டுக்களை மொத்த மாகவும், தனித்தனியாகவும் பிரித்துப் பார்த்தார்.

இவையெல்லாம்கள்ள நோட்டுக்கள் என்பதை யாவது நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா???

எனக்குத் தெரியாது!’’ என்றார் சந்தானம்.

  • எது உங்களுக்குத் தெரியாது???

இப்போது இங்கே நடக்கிற விஷயங்களைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது என்றுதான் சொல்லுகிறேன்.’’