பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101.

தெரியாது என்று நீங்கள் ஒரே வார்த்தையில் கூறிவிட்டால், அதைப் போலீஸ் ஏற்றுக் கொண்டு விடுமா? இது உங்களுடைய பங்களா; இது

உங்களுடைய பனப்பெட்டி.’’

அதையெல்லாம் நான் மறுக்கவில்லையே!”

o' உங்கள் வீட்டு மாடியைச் சே ாதனை போ ட்டுத் தானே இந்தக் கள்ள நோட்டுகளை யெல்லாம் எடுத்தோம்???

C அதை யும் ந: ன் 1 ). க்கவில்லை; ஆனால்

இந்தக் கள்ள நோட்டுகள் எ ப் ப டி என் இருப்பிடத்துக்கு வந்தன என்பதுதான் எனக்குப் புரியவில்லை’ என்றார் சத்தானம். உடனே இன்ஸ்பெக்டர் , இப்படிச் சொன்னால் எப்படி? சமூகத்தில் நீங்கள் அந்தஸ்து உள்ளவர்கள்.

உங்களிடம் நம்பிக்கை வைத்து, உங்கள் வார்த்தை களுக்கு மதிப்பு வைத்து நாங்கள் கேட்கிறோம்.??

நான் உங்களைக் குறை கூறவில்லை. ஆனால் என்னால் உங்களுக்கு இந்தச் சமயத்தில் வேறு எந்த விதமான பதிலையும் கூற முடியவில்லையே! பள்ளியில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப் பதற்காகச் செக் எழுதிக் கொடுத்தேன். மானேஜர் டவுனில் மாற்றிக் கொண்டுவந்த பணத்தை மாடியில் கொண்டு வைத்தேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்....?? என்றார் சந்தானம் அமைதியாக.

ஜே.-7