பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சாயாவைக் குடித்து முடித்த பாவாடையின் கையிலிருந்த கிளாஸை உக்கடை பையன் மிகுந்த மரியாதையுடன் வாங்கிக் கொண்டு போனான். வஸ்தாத் மீண்டும் ஒரு பீடியை எடுத்துப் பல் விடுக்கில் செருகி அலட்சியமாக வத்திப்பெட்டியை இடுப்பிலிருந்து எடுத்து ஓர் உரசு உரசியபோது அது துள்ளிக் குதித்துச் சங்கரின் அருகில் வந்து விழுந்தது. அருகில் இருந்த மாணவர்கள் கொல்’ லென்று சிரித்துவிட்டார்கள்.

சுற்றிலும் விழிகளைச் சுழலவிட்டான் வஸ்தாத். பல ஜோடிக் கண்கள் தன்னையே பார்த்துக்கொண் டிருப்பது தெரிந்தது. குனிந்து வத்திப் பெட்டியை எடுப்பது அப்போது தன்னுடைய கெளரவத்துக்கும், வஸ்தாத் தன்மைக்கும் இழுக்கு என்பது போல் நினைத்து, டேய், அந்த வத்திப் பெட்டியை எடுடா!?? என்று சங்கரைப் பார்த்துச் சவடாலாகக் கூறினான் பாவாடை.

சங்கர் அலட்சியமாகச் சிரித்தான்.

டேய் சோமாறி, முழிக்கிறியே! உன்னைத் தாண்டா சொல்றேன். எடுடா வத்திப் பெட்டியை!”

சங்கர் அப்படியே எழுந்து நின்றான்.

என்னடா முறைக்கிறியே! சொல்றது காதிலே விழல்லே? ஏ களுதே! எடு! உன்னைத்தான்.’’