பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O

சங்கருடைய அலட்சியச் சிரிப்பும், பார்வையும் பாவாடையின் ஆத்திரத்தைத் துாண்டியது, ஓங்கி ஒரு அறை விடலாமா என்று யோசித்தான்.

ஆனாலும் ட

பள்ளிக் கூடத்துப் பையன்கள்! நாளைக்கு, விவகாரம் முற்றி வேறு விதமாகத் திரும்பி விட்டால் ஊரில் கேவலமாகத் தன் பெயர் அடிபடும் என்கிற எண்ணத்தில் கோபத்தைச் சற்று அடக்கிக் கொண்டு

'தம்பி, உன்னைத்தான் சொல்லறேன்; அந்த வத்திப் பெட்டியை எடுத்துக் குடு’, என்று சங்கரைப் பார்த்து கம்பீரமாகக் கூறினான். ஆனால் சங்கர் அதை லட்சியமே செய்யவில்லை.

உழைத்துச் சாப்பிட விரும்பாமல் வெறும் உடம்பைக் காட்டியே ஊரை மிரட்டி மிரட்டி வயிறு வளர்க்கும் வஸ்தாதை கிராமத்திலுள்ளவர்கள் எல்லோரும் வணங்குவதை அவன் கண்டிருக் கிறான். அதற்காக?...அவனும் பயப்பட வேண்டுமா என்ன?