பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0

எதிர்பாராமல் விழித்துக் கொண்டவன் என்னைப் படுக்கையில் கானோமென்று கவலைப்பட்டு வெளி யே... அதற்குமேல் அவனால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

சட்டென்று சமையல்காரக் கிழவியின் ஞாபகம் வரவே, சங்கர் வேகமாகப் பின்கட்டை அடைந் தான். ஆனால் அங்கே-அடுக்களையில்-அவன் கண்ட காட்சி!

ஒரு துரணில் சமையல்காரக் கிழவி பின்கட் மாறாகக் கயிற்றால் கட்டப்பட்டிருத்தாள். அவளுக் குப் பக்கத்திலிருந்த ஒரு துணில் வசந்தியும் கட்டப் பட்டிருந்தாள். இருவரது வாயிலும் துணியைப் பந்துபோல் உருட்டி அடைத்திருந்தார்கள்.

இதெல்லாம் எப்பொழுது .ே ந ர் ந் த .ே த ! எத்தனை நேரமாக இவர்கள் இப்படி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களோ!

சங்கர் அதற்குமேல் விநாடிகடத் தாமதிக்க வில்லை. மூச்சு முட்டி விழிகள் பிதுங்கி நின்ற வசந்தியின் வாயிலிருந்த துணியை முதலில் எடுத் தான். சங்கர்’ என்று அவள் பெரிதாக அழ ஆரம் பித்தாள்.

கிழவி வாயிலிருந்த துணி உருண்டையை அகற்ற இன்னும் சற்றுத் தாமதித்திருந்தர்ல்கூட அவள் மூச்சுத் திணறி இறந்தே போயிருப்பாள்.

சங்கர் அவர்கள் இருவரையும் கட்டியிருந்த கட்டு