பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

3) &;T அவிழ்த்துவிட்டான். விடுதலையடைந்த கிழவி குய்யோ முறையோ என்று கத்தி ஆர்ப் பாட்டம் செய்தாள்.

சங்கர் அவளைச் சமாதானப்படுத்தி, என்ன நடந்தது?" என்று விஷயத்தைக் கேட்டான்.

முதல்லே நீ வீட்டுக் கதவைத் திறந்து போட் டுட்டு எங்கே போனே? சொல்லு' என்று கிழவி எதிர்க் கேள்வி கேட்டாள். சங்கருக்கு எரிச்சல் வந்தது.

அதிருக்கட்டும்; இங்கே நடந்த விஷயத் தைச் சொல்லுங்க! என்று ஒர் அதட்டு அதட் டினான். ஆனால் கிழவி அதை லட்சியம் செய்த வளாகவே காணவில்லை. அதுதான் பொண்ணு உன் பக்கத்திலேயே நிக்குதே, அதைக் கேளு. எல்லாம் விவரமாச் சொல்லும். எஜமான் வந்ததும் நீ பண்ணின காரியத்தை நான் அவருகிட்டே சொல்லத்தான் போறேன்???

சங்கருக்கு ஒரு க ண ம் திக் கென்றது. அவனுக்கு ஆதியிலிருந்தே அவளைப் பிடிக்கவில்லே. அவளுடைய நடத்தை-செய்கைகள்-நம்பிக்கை ஊட்டுவனவாக இல்லை. இப்போது அவளுடைய பேச்சின் போக்கு வேறு சந்தேகத்தைக் கிளப்புவது போல் இருக்கவுமே, இங்கு நடக்கும் எல்லா விஷயங்களையும் இவள் உளவு பார்த்துக் கொண்டு தான் இருந்திருப்பாளோ? அப்படியானால் இரும்புப் பெட்டியிலிருந்து துப்பாக்கியை நான் எடுத்து வைத்