பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 நீ உள்ளேப்போய் படுத்துக்கோ என்று அடுக்களை விளக்கை அணைத்தாள் கிழவி. வசந்தி மிகுந்த துயரத்துடன் தன்னுடைய கட்டிலில் வந்து படுத்தாள். சங்கர் என்னை விட்டு விட்டுப் போய்விட்டானே! என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். இதேபோல் ரெயில் பிரயாணம் செய்துகொண் டிருந்த சங்கரும் வேதனைப்பட்டான். வசந்தியிடம் நம்முடைய திட்டம் எதைப் பற்றியும் கூறாமல்; இப்படித் திடீரென்று புறப்பட்டு வந்து விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதே!’ என்று வருந்தினான். வெளியே எங்கும் கும்மிருட்டு. அந்த இருளுக்குப் பின்னணி போல்; ஒடுகிற ரெயிலின் கடகட’ என்னும் ஓசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவனால் பட்டாமணியத்தை மறக்கவே முடிய வில்லை. பணம் படைத்த மனிதர்களிடையே இத்தனை சூதும், வாதும், பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்க்கும் பேராசையும் ஏன் இடம் பெறவேண்டும்? ஏழைகளும், வாயில்லாம் பூச்சிகளும், இந்த வலியவர் களிடம் . கொடிய எண்ணமுடைய இரக்கமற்ற மனிதர்களிடம் சிக்கி என்ன பாடுபடுகிறார்கள் என்று சிந்தித்தான்; இதற்குத் தன்னால் இயன்றதைச் செய்தே ஆகவேண்டுமென அவன் தீர்மானித்தான். ஜே.....9 ---