பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அதேசமயம்-ஏழைகளுக்காக - பணபலம் படைத்த இரக்கமற்ற சமூகத் துரோகிகளுடன் மோதுவது; கல்லில் தலையை மோதிக்கொள்வது போன்றது என் பதையும் உணர்ந்திருந்தான். ஆயினும், அவனால் கண்ணெதிரே நடக்கும் அதிதியைக் கண்டு சகித்துக் கொண்டு கோழையாக வாழப் பிடிக்கவில்லை. கடவுளால் தனக்கு அளிக்கப்பட்ட உடல் வலிமை, உன்ளத்து இரக்கம், சிந்தனைத்திறன், இம் மூன்றையும் கொண்டு ஒரு சில அக்கிரமக்காரர்களின் தீச்செயலையாவது ஒழித்தால்தான் அவன் மனம் ஆறும் போலிருந்தது. o புதிதாகத் தான் மேற்கொண்டுள்ள முயற்சியில் இறங்கும்போது; தனக்கு எடுத்ததுமே வெற்றியோ புகழோ கிடைத்து விடாது என்றாலும்; ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தானது என்பதைச் சங்கர் உணர்ந்து கொண்டான். டவுனிலுள்ள ஒரு சாதாரண ஹோட்டலில்ஆனால், பத்திரமான-ஒர் அறையை வாடகைக்கு "எடுத்துக்கொண்ட சங்கர் அன்று பிற்பகல் ஒரு பொதுத் தொலைபேசி அறையிலிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தான். - இன்ஸ்பெக்டர் ரிசீவரைக் கையிலெடுத்து, யார் பேசுகிறது?’ என்று கேட்டதும், "நான்தான்