பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 நோட்டுக்களை அவரே தன்வீட்டில் வைத்திருந்த தாக ஒப்புக் கொள்ளவில்லையல்லவா..?? உடனே இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, அப்படி, யார்தான் உடனே குற்றத்தை ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்; எல்லாம் விசாரணை நடத்தினால் உண்மை வெளி வரும்.’’ நீங்கள் நடத்துகிற விசாரணையின் மூலம் உண்மை வெளிவராது. சந்தானம் பிள்ளை ஒரு கண்ணியமான மனிதர். தன் வாழ் நாளில் ஒரு தவறு கூடச் செய்யாதவர். அப்படிப் பட்டவருக்கு அந்தக் கள்ள நோட்டுக்கள் த ன் னு ைட ய வீட்டிற்குள் எப்படி வந்து சேர்ந்தன; யார் இந்த வேலையைச் செய்திருப்பார்கள் என்று தெரியாத நிலையில்- அவர் மெள ன மா. க உங்களுடைய அழைப்பிற்கு இணங்கி உடன் வருவதைத் தவிர; அவரால் வேறு என்ன செய்ய முடியும்! 'நான் சொல்லுகிறேன் - நீங்கள் உ ங் க ள் இட5) 1) 50|L மேலெழுந்த வாரியாகச் செய்து கொண்டு போயிருக்கிறீர்கள். எதிலும் சந்தேகப் பட்டுத் துருவிப் பார்க்கிற உங்களுடைய இலாகா விற்கே உரிய செயல் முறையை-இந்த வழக்கில் தாங்கள் கையாளத் தவறி விட்டீர்கள். 'கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டதே உங்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றி போல எண்ணி