பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பாவாடை எங்கே?. பாவாடை எழுந்திருப்பதற்குள் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடப்போகிறதே என்று வத்திப்பெட்டியை வஸ்தாதிடம் எடுத்துக் கொடுக்கப் போனார். உடனே

வஸ்தாத் அந்த ஆளின் முதுகுச் சட்டையைப் பிடித்து அப்படியே அலாக்காகக் கோழிக் குஞ்சைப் போலத் தூக்கி எறிந்தான். எட்டப்போய் விழுந்த அவர் உடனே எழுந்து வந்து, ஏண்டா தம்பி, இவ்வளவு பிடிவாதம்? பெரியவங்களுக்கு உதவி பண்ணினாப் புண்ணியம் உண்டுடா. வத்திப் பெட்டியை நீயே தான் எடுத்துக் கொடுத்தால் குறைஞ்சா போயிடும்??? என்று சங்கரைப் பார்த்து இதோபதேசம் செய்தார்.

இவனா பெரியவன்? பொறுக்கி: ) என்றான்

占F円历T。

இதைக் கேட்டதும் நெஞ்சு புடைக்கப் பாய்ந்து வந்த பாவாடை புறங்கையால் சங்கரின் கன் னத்தில் ஒர் அறைவிட்டு, காலால் எட்டி உதைக் கப்போனான்.

அவ்வளவுதான்; மறுபடியும் வஸ்தாதின் கால் சங்கரின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. இரும்புக் காலை ஒரு பிஞ்சுக்சுரம் அசைக்க முடி யாமல் மர்மமாகப் பிடித்து நிறுத்திவிட்டது.

ஐயோ, ஐயோ! உயிர் போகிறதே! விடுடா விடுடா!’’ என்று பாவாடை அலறினான்.