பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

காசில்லாமல், டிக்ககெட் வாங்காமல், ஒசியி லேயே ஒரு கூட்டம் இந்தக் குஸ்திக் காட்சியைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது. பாவாடையோ, சங்கரின் பிடியில் துடித்துக் கத்திப் புறண்டு கொண்டிருந்தான். சுற்றியிருந்தவர்கள் தங்கள் கண் களையே நம்பமுடியாமல், இதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

'ஜல்......ஜல்... ஜல்...!’’

பட்டாமணியகாரரின் இரட்டை மாட்டு வண்டி அது! மாடுகள் இரண்டும், தலைக் கயிற்றுக்கு அடங்காமல்முரண்டிக்கொண்டு அங்குவந்துநின்றன.

சங்கர் திரும்பிப் பார்க்கவில்லை. வண்டியில் பட்டாமணியகாரரும் அவர் மகள் வசந்தியும் இருந்தார்கள். கலகல வென்று மெல்லிய சிரிப் பொலி கேட்டது. பட்டாமணியம் பதறிப் போனார் வஸ்தாது புரண்டுகொண்டிருந்ததைக் கண்டு வசந்திக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

சங்கர்!... போதும்! ... போதும் விட்டுவிடு!’’ என்று வண்டியிலிருந்தபடியே கத்தினார் அவர்.

பழக்கமான அந்தக் குரலைக் கேட்டுச் சங்கர் பிடியைத் தளர்த்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். அருகே பட்டாமணியம் நின்று கொண்டிருந்தார். வண்டியிலிருந்து வசந்தி வைத்த கண் வாங்காமல் தன்னையே பெருமையுடனும் பூ ரி ப் புட னு ம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் சங்கர்.