பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பதுக்கல்காரர்கள் இன்னும் பலதரப்பட்ட பேர் வழிகள் என்னிடம் சிக்கியுள்ளார்கள். 'முதலாவதாக நீங்கள், சந்தானம்பிள்ளை குற்றவாளி அல்ல என்பதை நம்பி அவரைக் கெளரவமாக நடத்துங்கள். நீங்கள இப்போதே தக்க படையுடன் நான் கூறும் விலாசத்துக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். அங்கு கள்ள நோட்டு மலை யைக் காண்பீர்கள். அவர்கள்தான் வேண்டு மென்றே போலி நோட்டுகளைச் சந்தானம் பிள்ளை வீட்டில் வைத்துவிட்டு தாங்கள் தப்புவதற்காகஉங்களிடம் அவரைக் காட்டிவிட்டார்கள். உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க உடனே புறப்படுங்கள். இரவு நடுநிசிக்கு அந்த ரகசியப் பங்களாவை முற்றுகை இடுங்கள். வெற்றிக்குப் பின் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்!?? போனில் வந்த செய்தியை இன் ஸ்பெக்டரால் அலட்சியப் படுத்த இயலவில்லை. இளம் பையன் ஒருவனுடைய குரல் போல் இருந்தாலும்; அந்தக் குரலில் உண்மையின் சாயை இருப்பது போல அவருக்குப் பட்டது. அதன் பிறகு - போலீஸ் சுறுசுறுப்பாகச் சில நடவடிக்கைகளை மேற் காண்டது. சங்கர் தன் இரும்புப் பெட்டி ரகசியங்களை அறிந்து சென்றதிலிருந்தே பட்டா மணியம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண் டிருந்தார். 轟