பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சங்கர் தலைமறைவான பிறகு சில புதிய சம்பவங்கள் சங்கிலித் தொடர்போல் நடந்தன. பட்டாமணியம் ஆஸ்பத்திரியிலிருந்து விசேஷ அனுமதி பெற்றுக்கொண்டு வீடு திரும்பியும் அவர் முயற்சிகள் பலிக்காமல் போயின. அவர் போலி சாரிடம் சிக்காமல் இருக்க கூட்டாளிகளான பாவாடை முதலானோரைக் காவு கொடுத்து விட்டுப் பங்களாவுக்குள்ளேயே பதுங்கிக்கொண்டார். சந்தானம் பிள்ளை ஜ ா மீ னி ல் வந்து சந்தைப் பேட்டையில் தம் அறப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். சங்கரை உயிரோடு இழந்து விட்டதாக எண்ணி அவர் உள்ளுற வருந்தினார். வசந்தி-சங்கரைக் காணாமல் சில நாள் வருந்தினாலும் ஜேம்ஸ் பாண்ட் சங்கர் எங்கும் எப்போதும் ஆபத்தில்லாமல் இருப்பான் என்று அவள் எண்ணியது போலவே போலீசுடன் ஒத்துழைத்து விட்டு தக்க சமயத்தில் வந்து சேர்ந்தான். இதற்குள் விசாரணை முடிந்து கடத்தல்; கள்ள நோட்டு அச்சடித்தல்; விக்ரகத் திருட்டு; கள்ளச்சாராயம் போன்ற பல குற்றங்கள் புரிந் தோரிடம் தொடர்பு கொண்டிருந்ததற்காக பட்டா மணியத்திற்கு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.”*