பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பாவாடைக் கும்பலுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தன. சங்கரின் கண்களில் படவே பட்டாமணியத்துக்கு வெட்கமாயிருந்தது. ஆயினும்; மனதார அவனிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டு-ரேக்ளா சவாரியின் போது சங்கரிடமுருந்து பாவாடை பறித்து வைத் திருந்த தங்க டாலரை மீண்டும் அவன் சட்டையில் செருகினார். கண்கலங்கிய பட்டாமணியத்தை அருகிலிருந்த சந்தானம் பிள்ளை சமாதானப்படுத்தினார். பட்டாமணியம்; தான் திரும்பி வரும் வரை, சங்கரைப் போலவே தன் மகள் வசந்தியையும் பாடசாலையில் தன்னுடன் வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். சந்தானம் அதை மகிழ்ச் சியோடு ஏற்றுக் கொண்டு பட்டாமணியத்தை நிம்மதியாகச் சென்று வரும்படிக் கூறினார். சங்கரும், வசந்தியும் அந்த ஆண்டு தேர்வு வரை ஒரே பாடசாலையில் இருந்து ஒரே பள்ளியில் படித்து தேறினார்கள். சங்கர் இப்போது பட்டணத்தில் சந்தானத்தின் உதவிப்பெற்றுப் படித்து வருகிறான். படிப்புச் செலவு; ஹாஸ்டல் செலவு எல்லாம் அவருடையது