பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

என்று கூறியபடி சங்கருடைய இரு கைகளையும் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

சங்கர் நாயரிடமும், மற்றவர்களிடமும் நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டான்.

விராசுதார் சந்தானத்தின் சம்பந்தர் தரும உணவு விடுதி”யில் சங்கரைப் போலவே தங்கிப் படிக்கும் குமாரைத் தவிர, மற்ற நண்பர்கள் எல்லாம் சங்கரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள்.

சங்கரும் குமாரும் ஒருவரை யொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சம்பந்தர் ஹாஸ்டலை அடைந்தார்கள். அவர்கள் மனத்தில் லேசான பயம் தட்டியிருந்தது. இத்தனை நாட்களில் அவர்கள் விடுதிக்கு இப்படி நேரம் கழித்து வந்ததே இல்லை.

இன்று, சங்கரும் குமாரும் ஹாஸ்டலுக்குள் நுழையும் போதே பிரார்த்தனை முடிந்து அனை வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . குப்ர

வைசர் கண்காணித்தபடி குறுக்கே நடந்து கொண் டிருந்தார்.

என்னடா செய்யலாம் சங்கர்?' என்றான் குமார் சற்றுப் பயம் கலந்த குரலில்,

பேசாமல் திரும்பி விடலாம்.’’ என்றான் சங்கர்.

ஆமாம்; அதுதான் சரி. பொல்லாத சூப்ர வைசர் கண்ணில் அகப்பட்டுக் கொண்டால், தேரே