பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

மிராசுதார் வீட்டுக்கே சமாசாரம் போய் விடும்...?? என்றான் குமார்.

போகட்டுமே!’ என்று தன்னுடைய இயல்புப் படி சங்கர் இப்போது பேசவில்லை. வேறு எந்தக் குற்றத்துக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் காலை, மாலை தேவார பஜனையில் ஹாஸ்டல் மாணவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் சந்தானம் மன்னிக்கவே மாட்டார்.

சரி; என் அத்தைக்கு உடம்பு சரியில்லே என்று ஆள் வந்தது. உடனே சங்கரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அரசலூருக்குப் போய் விட்டேன்’ என்று சொல்லலாமா?’ என்றான் குமார்.

-

அதுதான் சரி. இராப் பொழுதை ஏதாவது வீட்டுத் திண்ணையில் கழித்துவிட்டு விடிந்ததும் ஹாஸ்டலுக்கு வந்து இந்தச் சாடை அவிழ்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியே இல்லை, வா சீக்கிரம்!’ என்று சங்கர் வற்புறுத்தவே, குமாரும் பின் தொடர்ந்தான்.

இருட்டில் இருவரும் நடந்து ஆற்றங்கரைப் பாலத்தை அடைந்தார்கள். அங்கே உட்கார்ந்திருந் தால் பக்கத்துக் கொட்டகையில் நடைபெறும் சினிமா வசனம்-பாட்டுக்கள் எல்லாம் கேட்கலாம்.

முதல் ஆட்டம் முடிகிறவரை இருவரும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் அரை மணியில்