பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

எனவே, மிகுந்த சிரமப்பட்டுக் கம்பியை வளைப்பதுபோல் முக்கி முனகியபடி ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய சங்கருக்குத் திக்’ கென்றது.

ஆம்! ஒர் உருவம் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பது ம ங் க ல | ன வெளிச்சத்தில் தெரிந்தது. சட்டென்று கீழே குதித்தான் சங்கர். குமாரிடமும் விஷயத்தைக் கூறி உஷார்ப் படுத் தினான்.

அடுத்த நிமிஷம் என்ன நடக்குமோ என்று அவர்கள் திகில்பட்டுக் கொண்டிருக்கும்போதே, பூட்டுத் திறக்கப்படுகிற சத்தம் கேட்டது.

பூட்டை இவ்வளவு சுலபமாகத் திறப்ப فهميتافيا தென்றால், அதைப் பூட்டியவர்களால் தானே முடியும்? நிச்சயம் இது பாவாடையோ அல்லது அவனது ஆட்களோ தான் என்று அஞ்சி, மூலையில் இருவரும் பதுங்கினார்கள். அப்போது உள்ளே நுழைந்த உருவத்தின் கையிலிருந்த பாட்டரி, ஒளி வெள்ளத்தை வாரியிறைத்தது. அந்த வெளிச்சம் குறிப்பாக மூலையில் பதுங்கியிருந்த அவர்கள் மீது படவும் தவறவில்லை.

ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த உருவம், சங்கர் . என்று மெல்ல அழைக்கவும், ஏக காலத்தில் சங்கரும் குமாரும் திடுக்கிட்டுத் திரும்பிப்

பார்த்தார்கள்.