பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

'சார்!’’ என்று ஓடிவந்து காலில் விழுந்த குமாரையும், சங்கரையும் தூக்கி மார்போடு அனைத் துக் கொண்டார் ஹாஸ்டல் மேனேஜர் பசுபதி.

விவரம் எல்லாம் விடுதியில் போய்ப் பேசிக் கொள்ளலாம். இப்போது நாம் மூவருமே மிக ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம். உடனே ான்னோடு புறப்படுங்கள்: ' என்று அவசரப் படுத்தினார்.

அவர்கள் வெளியே வந்ததும் கதவை மீண்டும் பூட்டாமலே பசுபதியும் அவர்களுடன் புறப்பட்டார்.

உடனே குமார், ஏன் சார், கதவைப் பூட்டி வேண்டாமா? இல்லாட்டி அந்தேகம் ஏற்பட்டு விடாதா?’ என்றான்; ஏதோ அற்புத யோசனை யைக் கூறுபவன்போல.

பூட்டினால்தான் ச ந் தே க ம் ஏற்படும். ரன்னா, என்கிட்டே இருக்கிற இந்தச் சாவி, இந்தப் பூட்டோடெ ரெண்டு ஒரிஜினல் சாவிகளிலே. ஒண்ணு. இன்னொன்னு பாவாடை கிட்டே இருக்கு. இதை இப்படியே திறந்து விட்டுட்டுப் போனா, யாரோ பூட்டை உடைச்சுக் காப்பாற்றியிருக்காங் கன்னு நினைப்பான்!” என்று விளக்கம் கூறினார் பசுபதி.

உளனே சங்கர், வெளியே வளைந்திருக்கிற ஜன்னல் கம்பியைக் காட்டி, இது வழியா நாங்க தப்பிப் போனதா பாவாடை எண்ணிக் கொள்

ஜே.3 -