பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

ளட்டும்; நீங்க பூட்டை இழுத்துப் பூட்டிடுங்க” என்றான்.

பசுபதிக்கும் அதுதான் மிக நல்ல யோசனை யாகப் பட்டது. கதவை இழுத்துப் பூட்டைப் பூட்டி னார். விறுவிறு என்று மூவரும் சவுக்குத் தோப்பு களின் ஊடே குறுக்கும் நெடுக்கும் புகுந்து, பாட சாலை விடுதியை அடைந்தார்கள்.

வழி நெடுகக் குமாரும் சங்கரும், மானேஜர்

இங்கே எப்படி இவ்வுளவு கரெக்டாக நம்மைக் காப்பாற்ற வந்து சேர்ந்தார்? இங்கே அடைபட்டுக் கிடக்கிற விஷயம் அவருக்கு எப்படித் தெரிந்தது? மாவாடை கையில் இருக்கும் சாவிக்கு மற்றொரு சாவி நம் மானேஜர் கைக்கு எப்படி வந்தது? மானேஜருக்கும் பாவாடைக்கும் என்ன உறவு? அல்லது அவர்களுக்குள் என்ன விரோதம்? ஹாஸ் டலுக்கு வந்த பிறகு தங்களை என்னென்ன கேள்வி கள் கேட்கப் போகிறாரோ? என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் ஹாஸ்டலுக்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. மாறாக, உடனே அவர்கள் இருவரையும் கை கால் கழுவிப் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வரச் சொன் னார். சமையல் அறை விளக்கு மட்டும் எரிந்து: கொண்டிருந்தது. விடுதியில் மற்ற அறையிலுள்ள பையன்கள் எல்லாரும் எப்போதோ துரங்கிவிட்