பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

'சங்கருக்கு உதவி செய்ததில், தர்மமும் நியாய மும் இருக்கலாம், ஆனால் அது-அந்த உதவி-என் அப்பாவின் உயிரைப் பறிக்கிற அளவுக்குப் போகு மென்றால் அது கொடுமையல்லவா? அப்பாவின் மானக்கேட்டுக்கும் மரணத்துக்கும் நாமே காரண மாக இருப்பதா? எல்லாவற்றையும்விடப் பூட்டிய பூட்டும்; பூட்டிய படியே இருந்ததாம். சங்கர் ஜன்னல் கம்பியை நீக்கியல்லவா கம்பி நீட்டிவிட் டானாம்! அப்படியானால் நான் மானேஜரிடம் சாவி கொடுத்தனுப்பியது என்னவாயிற்று? என் உதவி பைப் பெறுமுன்னரே சங்கர் ஆப்பிச் சென்று விட்டானா?

இப்போது வெளியேயிருந்த பட்டாமணியம், பாவாடை, இவர்களுடையதைவிட, வசந்தியின் மனம் தான் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது. சங்கருக்கு ஆபத்தில் உதவத் துண்டிய அவளது நல்ல உள்ளம் தந்தையின் இடருக்கும் முடிவு

கானத் துடித்தது.

ஒரு திட்டம் அவள் உள்ளத்தில் பளிச்சிட்டது.

ஆனால் அதை எப்படி அவள் தன் தந்தை யிடம் தெரிவிக்க முடியும்? மேலும் தந்தையின் இந்த ரகசிய நடவடிக்கைகளை எல்லாம் அவள் கவனித்த தாகவே காட்டிக் கொள்ளக் கூடாதே! பிறகு அவள் மீதும் அவருக்குச் சந்தேகமல்லவா. வந்துவிடும்?