பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அப்போது, வசந்திக்காக வேளையாள் காப்பி இதாண்டுவந்து வைத்தான். அவனிடம் , 'வண்டிக் தார முனியன் இருக்கானா?” என்று விசாரித்தாள்.

ஐயாவும், பாவாடையும், முனியனும் ஏதோ முக்கிய விஷயம் பேசிக்கிட்டிருக்காங்க--’’

சரி. நேத்திக்கு வண்டியிலே என் பேனா விழுந்திடுத்து. முனியனை நான் கூப்பிட்டதா வரச் இசால்லு! வசந்தி துணிந்து ஒரு பொய்யைச்

சொல்லி அனுப்பினாள்.

ஆம்! அப்பாவுக்கும் பாவாடைக்கும் முனியன் இாவ்வளவு அத்தரங்கமோ, வசந்திக்கும் அவன் அவ் வளவு அந்தரங்கம். ஆனால் அவள் தாய்-பட்டா மனியத்தின் உத்தமமான மனைவி - உயிர் பிரியும் நேரத்தில் வசந்தியையும், தீய வழிகளிலே ஈடுபடும் தன் கணவரையும் துன்பம் நேராமல் காப்பாற்ற வேண்டிய பணியை அவனிடம் வேண்டியிருந்தாள். காரணம்; முனியன் அந்த வீட்டில்வண்டிக்காரனாக மட்டும் விளங்கவில்லை. குடும்பத்தில் சிகதி) பொறுப்புக்களுமே அவனிடம் தான் ஒப்படைக்கப் பட்டிருந்தன #

முனியனைக் கண்டதும் வசந்திக்கு அழுகையே வத்து விட்டது.

'உள்ளே பேசிக்கிட்டிருந்ததெல்லாம் என் காதிலேயும் விழுந்தது. அப்பாவுக்கு அவமானம் ஏற்படக்கூடாது முனியா!' என்று விம்மல்களுக் கிடையே வசந்தி முனகினாள்.