பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

முனியன் அன்போடு, 'நானும் அதைப் பத்தித் தான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்மா. இந்தப் பாவாடை எக்கச்சக்கமா சந்தானத்தய்யா கிட்டே போய் அவசரப்பட்டு உளறி வெச்சிருக்கான். இனி என்னெல்லாம் நடக்கப் போகுதோ?’ என்று அங்கலாய்த்தான்.

உடனே வசந்தி, அப்படியொன்றும் நேராது. சங்கரை என்னவோ காப்பாற்றி விட்டோம். அப்பாவுக்கும் ஒரு நல்ல வழி எனக்குத் தோணுது’’ என்றாள்.

'அது என்ன பாப்பா? என்று ஆவலோடு கேட்ட முனியன் காதில், ரகசியமாகத்தன்னுடைய யோசனையைக் கூறினாள் வசந்தி.

' என்ன இருந்தாலும் படிச்ச புள்ளை; படிச்ச புள்ளைதான். இந்த ஐடியா எங்க யாருக்கும் தோனவே இல்லையே! என்று புகழவாரம்பித்து விட்டான் முனியன்.

உடனே வசந்தி சட்டென்று அதை ஏற்காதவள் போல், அது சரி முனியா, இதில் ஒரு முக்கிய மான விஷயம். இப்போ நான் சொன்ன விஷயம் உனக்குத் தான். ஐயாகிட்டே நீ இதை உன்னு டைய யோசனையாகத்தான் சொல்லனும்; அதை மறந்துவிடாதே' என்று எச்சரித்தாள். முனியன் கிளம்பினான்.

குழம்பிக் கொண்டிருந்த பட்டாமணியத்திடம், 'எஜமான், எனக்கு ஒரு ஐடியா தோணுது.