பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பூப்பந்தாட்டப் போட்டியை அடுத்துக் கால் பந்துப் போட்டி ஆரம்பமாயிற்று.

இரண்டு கோஷ்டிகளின் பெயர்களும் வாசிக்கப் பட்டன. அனைவரும் தயாராய் ஃபீல்டுக்கு வந்து விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும் ரெபரி விசிலை ஊதினார். பம்பரமாகப் பையன்கள் சுழன்றும் பாய்ந்தும், ஒடியும் விளையாடினார்கள். பூப்பந் தாட்டத்தில் இழந்த வெற்றியைக் கால்பந்தில் நிலை நாட்ட வேண்டுமென்று பட்டணத்துக் கோஷ்டி மும்முரமாக ஆடியது.

தாயுமானவர் கோஷ்டியும், இதிலும் வெற்றி எங்களுக்குத்தான்!” என்கிற இறுமாப்புடனேயே ஆடியது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைக்க வில்லை. பட்டணத்துக் கோஷ்டியின் கோல்கீப்பர், தாயுமானவர் கோஷ்டியின் திறமைகளையெல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விடுவதில் வல்லவனாக இருந்தான். இறுதியில் அப்படியே ஏப்பம் விட்டு விட்டான்.

அன்று பளு எறியும் போட்டி; தாயுமானவர் பள்ளி மாணவர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டார் கள். வழக்கமாக நாம் ஜயிக்கும் வாலிபாலும், புட் பாலுமே போய்விட்டன; இதிலா சங்கர் ஜெயிக்கப் போகிறான்?’ என்று அனைவருமே வருத்தம் கலந்த குரலில் பேசிக் கொண்டார்கள்.