பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

ரெபரி மூன்றாவது விசிலை ஊதிவிட்டார். 10, 20, 30, 40, 50 கிலோ எடைக் கணக்கில் தரையில் குண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சங்கர் முதலில் 20 கிலோ குண்டைத் தூக்கி இடது கையால் அநாயாசமாா வீசி எறிந்தான். இந்தப் போட்டிக்குத் தாயுமானவர் பள்ளியின் சார்பில் சங்கரைத் தவிர வேறு மாணளர்கள் யாருமே கலந்து கொள்ள விரும்பவில்லை. தங்களால் முடியாது என்று ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் எதிர்த் தரப்பில் ஆறுபேர் கலந்து கொண்டிருந்தார்கள்.

சங்கர் வீசியதும், எதிர்க்கட்சியிலிருந்து ஒருவன் அதே தூரத்துக்கு அந்தக் குண்டை வீசி எறிந்துவிட்டுச் சென்றான்.

அடுத்து, சங்கர் வரிசையாக 30,40, என்றுவீசி எறிந்தான்; இப்போது எதிர்த் தரப்பில் ஒருவனே இருந்தான். 30-வது கிலோவிலேயே பாக்கிப்பேர்

தோற்றுப் போய்விட்டார்கள்.

கடைசியாக இருந்தவன் மிகுந்த சிரமப்பட்டு 40 கிலோவை வீசி எறிந்து தன்கட்சியின் வெற்றிக்கு உயிர் ஊட்டி விட்டான்.

உடனே சங்கர் 50 கிலோ குண்டைத் துரக்கிப் பலம் கொண்டமட்டும் வீசி எறிந்தான். எங்கோ கண்ணுக்கெட்டாத தூரம் புல்லுக்குள் சென்று விழுந்தது அந்தக் குண்டு!

கரகோஷம் வானைப் பிளந்தது. அத்தனை நேரம் உற்சாகமிழந்து கிடந்த தாயுமானவர் பள்ளி