பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களுமே வியப்பில் ஆழ்ந்து விட்டார்கள்.

பட்டணத்துக் கோஷ்டியில் இறுதியாக எஞ்சி யிருந்த அந்த மாணவன் மிகுந்த தயக்கத்துட னேயே வந்தான். அந்த 50 கிலோ குண்டை அவனால் முழங்காலுக்குமேல் தூக்க முடியவில்லை.

தன்னுடைய வலிமையை எல்லாம் திரட்டி, இரண்டு கைகளினாலும் உயர்த் துாக்கிய அவன்; குண்டை தொபுகடீர்’ என்று கீழே போட்டுவிட் டான். தூக்கவே முடியாதபோது எடுத்து வீசுவது எங்கே? தோற்றுப்போனான்!

கேட்கவேண்டுமா சங்கர் பள்ளி கோஷ்டியின் உற்சாசத்துக்கு? சங்கரின் நண்பர்கள் வெற்றி வாகை சூடிய சங்கரை அப்படியே அலாக்காகத் தோளில் தூக்கிக் கொண்டு ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் சங்கருக்குஜே!; ஜேம்ஸ்பாண்ட் சங்கருக்குஜே!!?? என்று புதிய பட்டமளித்து ஆனந்தக் கூத்தாடி னார்கள்.

அன்று முதல் சாதாரண சங்கர் ஜேம்ஸ்பாண்ட் சங்கரென்று எல்லா மாணவர்களாலும் அழைக்கப். பட்டான்.

ஆம், தாயுமானவர் பள்ளியின் சரித்திரத்தி லேயே ஒரு புதிய ரிகார்டை அல்லவா சங்கர் ஏற்படுத்தி விட்டான்! பளு எறிவதற்கான வெற்றிச் சுழல் கோப்பையைத் தொட்டுக்கூடப் பார்த்திராத தாயுமானவர் பள்ளியின் சார்பில் சங்கர் பெற்றுக்