பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

கொண்டபோது அங்கே கூடியிருந்த அத்தனை பேருடைய உள்ளத்திலும் மகிழ்ச்சி கரைபுரண்டோ டியது.

வசந்தியிள் கண்ணில் நீரே வந்து விட்டது. ஆம், சங்கர் அடைந்த வெற்றி அவள் அடைந்த வெற்றியே அல்லவா? அதுமட்டுமல்ல; அந்த வருஷ விளையாட்டுப் போட்டியிலேயே, வசந்தியும்-சங்க ருந்தானே பள்ளியின் புகழைக் காப்பாற்றியிருக் கிறார்கள்?

தம்முடைய பாதங்களைத் தொட்டு வணங்கிய சங்கரைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண் டார் சந்தானம். அப்போது அருகிலிருந்த பட்டா மணியத்தின் உள்ளத்தில் என்ன உணர்ச்சிகள் பிரதிபலித்தன என்று வர்ணிக்கவே முடியாது.

தன் கோட்டில் தொங்கிக் கொண்டிருந்த தங்க டாலரை எடுத்துச் சங்கரின் சட்டையில் செருகிய போது முதலில் வசந்திதான் கைதட்டி ஆரவாரத்தைக் கிளப்பினான். இப்போதெல்லாம் பட்டாமணியத்துக்கு வசந்தி வலது கண் என்றால் சங்கர் அல்லவா இடது கண்! ஆனால்.

எஜமானருடைய இந்தத் திடீர் மனமாற்றத் தைக் கண்டு எங்கோ மூலையிலிருந்த பாவாடை மிகவும் மனம் குமுறினான்.