பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

எத்தனை தெருச் சண்டைகள், б) IILIGC) தகராறுகள், கிஸ்தி வசூல் இதிலெல்லாம் பட்டா மணியத்துக்கு வலது கையா இருந்து ராப்பகலா எவ்வளவு உழைச்சிருக்கிறேன்; எத்தனை வருஷப் பழக்கம்! இந்த உறவை எல்லாம் மனுஷன் மறந்துப் பூட்டு, நேத்துவரை தீத்துக் கட்டணும்னு எண்ணிக் கிட்டிருந்த பயலைத் துக்கித் தலைமேலே வெச்சுக் கிட்டுத் திரியறாரே! அவன் என்ன சாதிச்சுப் புட்டான்னு டாலரைக் கழட்டி மாட்டினாரு.’’ என்று எண்ணி எண்ணிக் குமுறினான். வஞ்சம் தீர்த்துக்கொள்ளவும் வழி பார்த்தான்.

வருஷந்தோறும் சந்தைப் பேட்டையில் நடை பெறும் மாட்டுச் சந்தை மிகவும் பிரசித்தமானது.

மாட்டுச் சந்தை இருபது நாள் முதல் ஒரு மாசம் வரையில்கூட நடைபெறும். இதற்காகவே வழக்க மாக ஒரு திடல் ஒதுக்கப்பட்டிருக்கும்.

சந்தை கூடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ஹோட்டல், ஷாப்புக்கள், மளிகை என்று பலதரப் பட்ட திடீர்க் கடைகள் தோன்றிவிடுவது வழக்கம். வெளியூரிலிருந்து வரும் மாட்டு வியாபாரிகள் அந்தப் பொட்டல்வெளிகளில் தங்கள் விலையுயர்ந்த மாடு களையும் கட்டிவிட்டு; அருகேயே கூரைக் குடிசை கள் அமைத்துக்கொண்டு தாங்களும் தங்கிவிடு வார்கள்.

o

ஒரு நாள் பகல் பொழுது பட்டாமணியம் பாவாடையுடன் சந்தைக்கு வந்திருந்தார். கூடவே