பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வேடிக்கை பார்க்க வசந்தியும் வந்திருந்தாள். பலதரப்பட்ட மாடுகளைப் பார்வை இட்டார்கள். சுற்றிக்கொண்டே வரும்போது துடிப்பான காளைக் கன்று ஒன்று பட்டாமணியத்தைக் கவர்ந்தது. ரேக்ளா வண்டிக்கு மிகவும் பொருத்தமான மாடு!

ஏன் பாவாடை, கன்னுக்குட்டி எப்படி யிருக்கு? பரவாயில்லையா??’ என்று கேட்டார்.

வாங்கிப்புடலாம் எசமான். சுழியெல்லாம் கூட நல்லாயிருக்கு ஆனா-’’

ஆனா என்ன???

விலையைத்தான் படையாச்சி ஒரே முட்டாச் சொல்றாரு. ஐந்நூறு ரூபாய் வேனுமாம். ஒரு ஜோடி மாடு விலை!’’

ஐந்நூறு ரூபாயா??? - பட்டாமணியம் வியந் தார்.

எனக்காகக் கொடுக்க வேண்டாம்; ஐயா! மாட்டைப் பிடிச்சுப் பார்த்துக் கொடுத்தாப் போதும். நானுற்றி ஐம்பதுவரை கேட்டிருக்காங்க!” என்று படையாச்சி கூறினார்.

அந்த அழகான காளைக் கன்று வசந்தியைப் பார்த்துத் தலையைத் தலையை ஆட்டியது. மிகவும் வாஞ்சையுடன் அவள் அதன் முகத்தையும் முதுகையும் தடவிக் கொடுத்தாள். குவியால் அது பின்னங் கால்களைத் துாக்கிக் கொண்டு ஒரு துள்ளுத் துள்ளியது.