பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

எஜமான் கிட்டே வரணுங்கிறான் பயல். பணத்தைப் பார்க்காதீங்க..?? என்று படையாச்சி உற்சாக மூட்டினார்.

பட்டாமணியம் விரும்பியபடியே முனியனையும் அழைத்துக்கொண்டு மாலையில் பாவாடை வந்து ரேக்ளா மாட்டுக்குப் பேரம் பேசினான். முனியனுக் கும் மாடு பிடித்திருந்தது. ஆனால் ரொம்பத் துடுக் காக இருக்கும் போலிருந்தது. மேலும் வண்டியில் பூட்டி இதுவரை அதிகம் பழக்கப்படாததால், திமிர் ஏறிப்போயிருந்தது. அதனால்தான் ச ற் று த் தயங்கினான்.

எஜமானும் வசந்தியம்மாவும் இதுமேலே ஆசைப்படறாங்க...” என்று பாவாடை சற்று வற்புறுத்திக் கூறவே, அப்படீனன்னா முடிச்சுப்புடு வோம்?’ என்று முனியன் சம்மதித்துவிட்டான்.

ரேக்ளாவில் பூட்டி இதுவரை மூன்று தடவை கீழே தள்ளி வண்டியையும் உடைத்திருக்கிறதாம் இந்தக் காளை. அதனால் கொஞ்சம் ஜாக்கிரதை யாக இருக்கும்படி பாவாடையிடம் உள்ள நட்புற வினால் அந்தப் படையாச்சி ரகசியமாகக் கூறினார்.

உடனே பாவாடை, இதைப்பற்றி எல்லாம் எஜமான்கிட்டே மூச்சுவிட்டுடாதே. அப்புறம் மாடே வாங்கமாட்டாரு. எப்பேர்ப்பட்ட சண்டி மாட்டையெல்லாம் அடக்கியிருக்கேன்; இது என்னய்யா கன்னுக்குட்டி!?? என்று கூறிவிட்டான்.