பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மனத்துக்குள், ஏதோ திட்டமிட்டபடிதான் பாவாடை இப்படிப் பேசினான். o

புதிய மாடு பட்டாமணியத்தின் வீட்டுக்கு வந்து விட்டது. அதன் அழகைக் கண்டு வசந்தியும், சங்கரும் வியந்தார்கள். காடிகானாவில் நீண்ட காலமாகத் துரங்கிக் கொண்டிருந்த ரேக்ளா வண்டியை வெளியே இழுத்துக்கொண்டு வந்தான் பாவர்டை. அதை நன்றாகத் துடைத்து, சக்கரத் துக்கு மசியெல்லாம் போட்டு வைத்தான். மாட்டைப் பூட்டி வெள்ளோட்டம் பார்ப்பதற்கு ஒரு நல்ல நாளும் குறித்தாயிற்று.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். பிற்பகல் மூன்று மணிக்குமேல் புதுமாடு பூட்டி ரேக்ளா அன்றுதான் ஓடப்போகிறது. பாவாடை புது மாட்டை நுகத்தடியில் பூட்டி, அதன் நெற்றியில் பொட்டுவைத்து, பயலே! இன்னிக்கு உன் கை வரிசையெல்லாம் காட்டறதை நான் கண்ணாரப் பார்க்கப் போறேன். ஜாக்கிரதை' என்று முதுகின் மேல் ஓங்கி ஒரு ஷொட்டுக் கொடுக்தான். சங்கரைப் பார்க்கப் பார்க்க - அவனுடைய சட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்டாமணியத்தின் தங்க டாலரைப் பார்க்கப் பார்க்க- அவன் மனம் பற்றி எரிந்தது.

பெயலே சங்கர். இன்னியோட நீ ஒழிஞ்சே.

நீ மட்டுமில்லே. உன்னைத் தூக்கித் தலைமேலே வெச்சுக் கூத்தாடற எஜமானும் அவர் பொண்னும்