பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட சங்கர், சுறு சுறுப்பாகத் தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு விட்டான். இதெல்லாம் கட்டுப்பாடு மிகுந்த அந்த ஹாஸ்டல் வாசத்தால் ஏற்பட்ட நல்ல பழக்கங்கள் என்பதை வசந்தி உணர்ந்து கொண்

ட .

திரும்பிய சங்கர், தன் எதிரில் மேஜைமீது காபி பலகாரத்துடன் வசந்தி தயாராகக் காத்திருப்பது கண்டு சிரித்தான். நன்றிப் பெருக்கால் கண்கள் பளபளத்தன.

ஹாஸ்டலில் மணி அடித்ததும், தட்டைத் துரக்கிக்கொண்டு ஓடுகிற வாழ்க்கையில் அநுபவப் பட்டவன் அவன். அநாதையாக ஐயனார் கோவிலில் கிடந்த அவனைச் சிறுவயதில் பூசாரிதான் எடுத்து வளர்த்து உயிரூட்டினார். ஏதோ தெய்வாம்சம் பொருந்திய குழந்தை என்று, இறுதி நெருங்கும் வரை அவர் கண்ணும் கருத்துமாய்க் காப்பாற் றினார். விவரம் தெரிந்ததுமுதல் அவனுக்கு ஹாஸ் டல்தான் கோயில்? அதில் எல்லோரும் வழிபடுகிற சந்தானம் தான் அன்னை; தந்தை தெய்வம் அனைத்தும் இப்படி ஒரு பொதுப்படையான-பரவ லான இயந்திர வாழ்க்கை வாழ்ந்து வந்த அவனுக்கு, வசந்தி தன்னிடம் காண்பிக்கிற விசேஷ அன்பும் பாசமும் அவன் நெஞ்சை நெகிழச் செய்தன.

பள்ளிக்கூடத்துக்கு இருவரும் சேர்ந்தே வண்டி யில் போனார்கள், மாலையிலும் ஒன்றாகவே வீடு