பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

'அதுக்காக ஏன் பட்டாமணியம் நீங்கள் வருத்தப்படlங்க? நீங்களே இப்படிக் கண்கலங்கின குழந்தை வசந்திக்கு யாரு ஆறுதல் சொலுவார் கள்??? என்று பொன்னுசாமி கூறினார்.

வசந்திக்காக - அவளை நெனைச் சுத் தான் பொன்னுசாமி நான் இப்படிக் கலங்கறேன். என் காலைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. தாயில்லாப் பொண்ணு. இத்தனை வயசிலே அவளை விட்டுப் பிரிஞ்க நான் ஒருநாள் கூட இருந்த தில்லே! நேத்திக்கு ராத்திரி பூரா எனக்குத் தூக்கமே வரல்லே. என் உடம்பு தான் இந்த ஆஸ்பத்திரிக் கட்டிலிலே கிடந்ததே தவிர; என் மனசு பூரா வசந்தியைப் பத்தியேதான் கவலைப் பட்டுக்கிட்டிருந்தது.

+

'இந்தமாதிரி சமயத்திலே நீங்க இப்படிக் கவலைப்படக்கூடாது. வசந்தி உங்களுக்கு எவ்வளவு அருமையின்னு எங்களுக்கெல்லாம் தெரியாதா? நாங்கள்ளாம் சிநேகிதங்கன்னு பின்னே எதுக்குத் தான் இருக்கோம்? குழந்தையைப் பார்த்துக்க மாட்டோமா? அவளுக்கு அங்கே தனியா இருக்கப் பிடிக்கலேன்னா என் வீட்டுக்கு வேணும்னாலும் அழைச்சுக்கிட்டுப் போயிடறேன். நம்ம பசங்க ளோடு பசங்களா அவ சந்தோசமா இருப்பா!'

பொன்னுசாமியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பட்டாமணியம், தன் மகளுடைய விருப் பத்தைக் கேட்பது போல், வசந்தியினுடைய முகத்