பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

அவன் அதையெல்லாம் எஜமான் படுத்திருந்த கட்டிலின் பக்கத்தில் இருந்த ஷெல்பில் வைத்து

மூடினான். -

பர ஸ் பர ம் ஒருவருக்கொருவர் தேறுதலும் சமாதானமும் சொல்லிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

- விவிட்டர்கள் நோயாளிகளைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதற்கான மணி அந்த ஆஸ்பத்திரி முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பட்டாமணியம் தலையணைக்கு அடியிலிருந்த தம் பாக்கெட் வாட்ச்சைப் பார்த்தார்: மணி ஆறு.

அங்கே வந்த ஸ்டாஃப் நர்சிடம்,பட்டாமணியத் தைக் கவனித்துக் கொள்ளும்படி பொன்னுசாமி கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களிடம் அந்த நர்ஸ் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூறினாள்.

மறுநாள் காலையில் ஒரு பேஷண்ட் டிஸ்சார்ஜ் ஆகிறபடியால், ஸ்பெஷல் வா டி ல் பட்டா மணியத்துக்கு இடம் கிடைத்துவிடும் என்பதுதான்

அது.

இது பட்டாமணியத்துக்கும் பொன்னுசாமிக்கும் சற்று ஆறுதலாயிருந்தது. ஏனெனில், ஸ்பெஷல் வார்டில்தான் கூடவே துணைக்கு ஓர் ஆள் இருக்க முடியும்; ஆஸ்பத்திரியில் உடன்தங்க அநுமதிப்பார் கள். ஆகவே இனிமேல், முனியன் பட்டாமணியத்