பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

துடனேயே இருந்து ஆகவேண்டிய உதவிகளைச் செய்யலாம். *

"அப்படியானால், முனியன் ஏன் அநாவசியமாக அலையவேண்டும்? ராப்போழுதை இங்கேயே ஒட்டி விடட்டும். காலையில்தான் ரூம் கிடைத்துவிடுமே காபி பலகாரம், சாப்பாட்டுக்கு இனி கவலை இல்லை. முனியன்கூட இருந்தால் எங்களுக்கும் சமாதான மாக இருக்கும்!’ என்றார் பொன்னுசாமி. பட்டாமணியத்துக்கும் அதுவே சரி என்று பட்டது.

"செலவுக்குப் பணம் அனுப்பட்டுமா?’’ என்று கேட்டார் பொன்னுசாமி.

பட்டாமணியம் தலைமாட்டிலிருந்த பர் ஸைத் திறந்து பார்த்துவிட்டு, அவசரமில்லை நாளைக்கு நீ வருகிறபோது நூறு ரூபாய் கொண்டு 6ב:fr!יי எள்றார்.

அறிவிப்பு மணியை அலட்சியம் செய்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் பார்வை யாளர்களைத் து ரி த க தி யி ல் துரத்தியபடி ஆஸ்பத்திரிச் சேவகன் வந்துகொண்டிருந்தான். எல்லோரும் பட்டாமணியத்திடம் விடைபெற்று க் கொண்டு புறப்பட்டார்கள். போகும்போது, வசத்தியை ஜாக்கிரதையாகக் கவனிச்சுக்கோ சங்கர். முனியன்கூட வீட்டில் இல்லை; ஜாக் கிரதை; என்று சங்கரிடம் பட்டாமணியம் தனி யாகக் கூறி அனுப்பினார்.