பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

இப்போது-பட்டாமணியத்தின் அத்தனை பெரிய வீட்டில் சங்கர், வசந்தி, சமையல்காரக் கிழவி ஆகிய மூன்று பேர்தான். அதுவரையில் அவர் களுக்குத் துணையாக இருந்த முனியனும் இப்போது இல்லை. ஆஸ்பத்திரியில் எஜமானருக்கு உதவி யாக இருக்க அவன் அங்கேயே தங்கிவிட்டான். -

அந்த வருஷம், சங்ககுக்கும், வசந்திக்கும் பத்தாம் வகுப்பு. இறுதிப் ப ரீ ட் சைக் கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லை. சங்கர் வெகுநேரம் தன்னுடைய அறையில் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்தான். வசந்தியால் அவனைப் போல் அப்படித் தூக்கம் விழிக்க முடியவில்லை. அதிகம் போனால், இரவு பத்து மணிவரை கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியாது. புஸ்தகத்தில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு துரங்கிப் போவாள். சங்கர் மாத்திரம் இரவு வெகுநேரம் வரையில் கண் விழித்துப் படிப்பான்.

பட்டாமணியத்தின் உடம்பில் வியாதி கிளை விட்டுப் படர்ந்தது. லேசாக அடிபட்ட காயங்கள் கூட ஆறுவதற்கு வெகு நாளாயிற்று. உடம்பில் சர்க்கரை வியாதி இருந்தது ஒரு காரணம். அதிக ரத்த அழுத்தம் இருந்ததற்காகவும் சிகிச்சை நடந்தது. இப்படி நாட்கள் ஓடின.

பொன்னுசாமி மாலையில் வண்டி கட்டிக் கொண்டு ஆஸ்பத்திரியில் பட்டாமணியத்தை வந்து பார்க்கத் தவறுவதில்ைை. சங்கரையும் வசந்தியை