பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 யும் தினசரி அழைத்துக் கொண்டு வரவேண்டாம்.

படிப்புக் கெட்டுப்போகும்’ என்று பட்டாமணியமே கூறிவிட்டார்.

பாவாடையும் தனக்கு ஒய்வு இருக்கும் போதெல் லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து பட்டாமணியத்தைப் பார்க்கத் தவறுவதில்லை. ஆனால், அவன் வருகிற நேரம் அநேகமாக அவர் அருகில் முனியனோ, பொன்னுசாமியோ இல்லாத நேரமாகத்தான்இருக்கும்.

ஒரு நாள் தன் எஜமானரைப் பார்க்க வந்த பாவாடை கூறிய செய்தி பட்டாமணியத்தையே வியப்பிலாழ்த்தி விட்டது. உயிருக்கு ஆபத்து என்றால் யாருக்குமே பயம்தானே. அதிலும் நோய் வாய்ப்பட்டிருப்பவரிடம் மரணத்தைப் பற்றிப் பேசினால் மனம் எப்படிப் பதறாமலிருக்கும்?

பாவாடை, நீ சொல்றதெல்லாம் நெசமா??? என்றார் பட்டாமணியம் எல்லை மீறிய பரபரப் புடன்.

சத்தியமுங்க, எஜமான். நாம இந்தச் சந்தை யிலே வாங்கின கன்றுக்குட்டி, சந்தானமய்யா வித்தது. மூனு சந்தைக்கு முன்னே, சுழிக் கோளாறுன்னு, இந்தக் கன்றுக் குட்டியையும், மாட்டையும் வித்துப்புட்டாராம். அந்தப் பொல்லாத குட்டியைத்தான் நாம் கவனிக்காமப்போய் வாங்கி யிருக்கோம். அது நம்மை எந்தக் கதிக்கு உள்ளாக்கி யிருக்கு பார்த்தீங்களா???