பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

'சந்தானம் இதைப் பத்தியெல்லாம் எங்கிட்டே ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையே பாவாடை?’ ’

அவரு எப்படீங்க எஜமான் சொல்லுவாரு? நீங்கதான் பழைய விரோதத்தை மறுத்துப்புட்டுப் பழகறிங்க!’’

பட்டாமணியத்தின் உள்ளத்தில் பாவாடை சிறிது சிறிதாகச் சந்தானத்தைப்பற்றி விஷமேற்றி அவர் மனத்தையே கெடுத்துவிட்டான். ஆரம்பத்தி லிருந்த வெறுப்பு மறைந்து சந்தானத்துடன் இடைக் காலத்தில் பட்டாமணியம் சிநேகமாகப் பழகி வந்ததைப் பாவாடையின் இந்த விஷமப் பேட்சு முறித்து விட்டது. சந்தானம் என்றும் தமக்கு எதிரியே? என்கிற முடிவுக்குப் பட்டாமணியம் வந்து விட்டார்.

எதற்கும் நான் குணமாகி வீடு வருகிறவரை நீ இதொன்றையும் வெளியில் காட்டிக்கொள்ள வேண்டாம்: , என்று பாவாடையிடம் கூறினாலும் பட்டாமணியத்தின் மனத்துக்கு லேசில் அமைதி ஏற்படவில்லை.

பொன்னுசாமியிடம் தம் உ ள் ள த் து ஆத்திரத்தை யெல்லாம் கொட்டி, நமக்கு ஏற்பட் டுள்ள இந்தக் கதிக்கு மோசக்காரச் சந்தானம் தான் காரணம் என்று ஆத்திரம் தீரக் கூறினார். ஆனால் பட்டாமணியத்தின் கூற்று பொன்னு சாமிக்கு நியாயமாகத் தோன்றவில்லை.