பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

துெ, இது ஒரு பிழைப்பா!’’ என்று சங்கர் காறித்துப்பினான். இதைக் கண்ட மாணவர்கள் அசந்து போனார்கள்.

பார்த்தியாடா, பார்த்தியா, ஒரு நிமிஷத் திலே நம்மோடெ அத்தனை ஐடியாவையும் போட்டு உடைச்சு எறிஞ்சிப்பிட்டான் இந்தச் சங்கர்.?? இதைக்கூறி முடிப்பதற்குள் பாலுவுக்குக் கண்ணிரே வந்துவிடும் போலிருந்தது.

'இந்தப் பிசினஸ் பண்ணினா என்ன? இதுவு

ஒரு விதத்தில் சோஷியல் ஹெல்ப் தானே? கூட் டத்திலே முண்டியடிச்சு வாங்க முடியாதவங்க எத்தனை பேர் இருப்பாங்க? இத்தனை தூரம் நடந்து வந்து கெளன்டர் மூடினதும் ஏமாந்து போற வங்க எத்தனை பேர் இருப்பாங்க! இவங்களுக் கெல்லாம் நாம உதவிதானே செய்யப் போறோம்? அதுக்கு லேபர் வாங்கினாத் தப்பா? என்றான் குமார் .

சுள்ளி பொறுக்கிச் சம்பாதிக்கலாம்? என்று சங்கர் கூறினான். வேறு ஒன்றும் விளக்கம் கூற வில்லை. சங்கர் அவ்வளவுதான் பேசுவான். மற்றவர்கள்தான் அதை விளக்கம் செய்து கொள்ள வேண்டும்.

"ஆமாம்! நீ எல்லாத்துக்கும் இப்படித்தான் பேசுவே. பெரிய வஸ்தாதாம்-அவரே செய்ய றாராம்.’’