பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

டாத கன்றுக்குட்டியை, சந்தானத்தின் பண்ணையில் கொண்டுபோய் எதற்காக விடுவது? இதென்ன வீண் சண்டையை வலைக்கு வாங்குகிற வியாபார மாகவல்லவா இருக்கிறது?’ என்று எண்ணிக் கொண்டார்.

புறப்படும்போது பட்டாமணியம், பொன்னு சாமியிடம் தம்முடைய இரும்புப் பெட்டிச் சாவி யைக் கொடுத்தார். அதை வசந்தியிடம் கொடுத்துப் பெட்டியில் மேலாகவே வைத்திருக்கும் பாங்க் புஸ்தகப் பையை வாங்கி வரும்படி கூறினார்.

பட்டாமணியத்துக்கு அப்படி யொன்றும் திடீ ரென்று அவசரச் செலவு முளைத்து விடவில்லை. பாவாடை அவரிடம் ஒரு முக்கியமான காரியத்துக் காகப் பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தான். அவனுக்காகத் தான் அவர் வீட்டிலிருந்து பாஸ் புஸ்தகத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.

முனியன் மட்டும் உள்ளுற வருந்தினான். இந்த அயோக்கியன் பாவாடையை எஜமான் நம்பு கிறாரே, அதை முன்னிட்டு அந்தப் பாவிப்பயல் ஆஸ்பத்திரிக்கு வந்துகூட அவருக்குத் தொந்தரவு கொடுத்து, மனத்தை ஏதாவது சொல்லிக் கலைத்து விட்டுப் போகிறானே!?? என்று முனியனுக்குப் பாவாடைமீது ஆத்திரம் பற்றிக் கொண்டுவந்தது. ஆனால், அவனால் என்ன செய்துவிட முடியும்? அதட்டிப் பேசினால், மறுவார்த்தை கூறாமல் கீழ்ப்படிய வேண்டிய வேலைக்காரன்தானே?